முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கை சந்திக்க அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு. வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை ரத்துசெய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்ய மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கை சந்திக்கவும் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது […]
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சுய உதவி குழுக்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் உதவி வழங்கப்பட உள்ளது என்றும் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார் எனவும் கூறினார். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ளாட்சி […]
ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் 4 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் ஜாபர் சேட்டிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் விசாரணை நடத்தி உள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக […]
இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு. தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த நிலையில், தக்காளி விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் […]
அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. காவல்துறையை விமர்சித்ததாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2014-ல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் காவல்துறையை ஐ.பெரியசாமி விமர்சித்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. அரசியல் உள்நோக்கத்துடன் பதியப்பட்டுள்ள வழக்கு என்பதால் அதை ரத்து செய்யுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்த நிலையில் ரத்து செய்யப்பட்டது.
பொங்கல் பரிசு தொடர்பான வழக்கில் அமைச்சர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசி குடும்ப அட்டைதாரர்களுக்காய் தரமற்ற பொங்கல் பரிசு வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ பெரியசாமி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பரிசு தொகுப்பு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூரை சேர்ந்த ஜெயகோபி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு […]
மூன்று லட்சம் வரை கடன்களுக்கு வட்டி விகிதத்தை 12 லிருந்து 7 சதவிகிதமாக குறைக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு. கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை கொள்ளை விளக்க குறிப்பை அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழக சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக இருக்கும் பெண்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்க்கப்படுவர் என்று அறிவித்தார். மகளிர் சுய உதவி குழுக்களில் ரூ.3 லட்சம் வரை கடன்களுக்கு வட்டி […]