#Breaking:நாளை வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க தடை!

மதுரையில் மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,கடந்த ஏப்.12 இல் கள்ளழகர்,அழகர் கோவிலில் இருந்து தனது

மதுரையில் மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,கடந்த ஏப்.12 இல் கள்ளழகர்,அழகர் கோவிலில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.

இந்நிலையில்,மதுரை வைகை ஆற்றில் நாளை கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி,அதிக அளவு தண்ணீர் வருவதால் நாளை வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

எனினும்,வைகை ஆற்றின் கரையோரங்களில் மட்டும் நின்று சாமி தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.