சிமி இயக்கம் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

amith sha

இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்துக்கு (SIMI) விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்துக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், நாட்டுக்கு எதிரான சதிச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டப்பட்டது. இதன்காரணமாக இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) முதன்முதலில் பிப்ரவரி 1, 2014 அன்று இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. உத்தரப் பிரதேசம், கேரளா, டெல்லி, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், … Read more

எத்தனால் தயாரிக்க கரும்பை பயன்படுத்த தடை… மத்திய அரசு அதிரடி உத்தரவு!

sugarcane

எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகளை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் உத்தரவில், சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகள் கரும்புச் சாற்றையோ, கூழையோ எத்தனால் தயாரிக்க பயன்படுத்தக் கூடாது. எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எத்தனால் தயாரிப்பதற்கு கரும்பை பயன்படுத்த தடை விதித்துள்ளது மத்திய அரசு. அதன்படி, எத்தனால் விநியோக ஆண்டு (ESY) 2023-24இல் எத்தனால் … Read more

#Breaking:உடலுக்கு கேடு…இதற்கு மேலும் ஓராண்டு தடை – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

உடலுக்கு கேடு விளைவிக்கும் குட்கா,பான் மசாலா,புகையிலைப் பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகள் மே 23 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில்,தற்போது குட்கா,பான் மசாலா,புகையிலைப் பொருட்கள் தயாரித்தல்,விநியோகித்தல் ஆகியவற்றுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,தமிழகத்தில் குட்கா,பான் மசாலா,புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே தடை விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.      

#Breaking:இந்த பகுதியில் ‘ஷவர்மா’ விற்க தடை – நகராட்சி தலைவர் அதிரடி உத்தரவு!

கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து,தஞ்சை ஒரத்தநாடு பிரிவு சாலை பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே புதிதாக திறக்கப்பட்ட கிரீன் லீப் உணவகத்தில் இரு தினங்களுக்கு முன்னர் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு திடீரென வாந்தி,மயக்கத்தால் உடல்நலக்குறைவு … Read more

#Breaking:நாளை வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க தடை!

மதுரையில் மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,கடந்த ஏப்.12 இல் கள்ளழகர்,அழகர் கோவிலில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். இந்நிலையில்,மதுரை வைகை ஆற்றில் நாளை கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி,அதிக அளவு தண்ணீர் வருவதால் நாளை வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். எனினும்,வைகை ஆற்றின் கரையோரங்களில் மட்டும் நின்று சாமி தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.  

“18 முதல் 60 வயதுடைய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை” – உக்ரைன் அரசு அறிவிப்பு!

உக்ரைனில் உள்ள 18 முதல் 60 வயதுடைய அனைத்து ஆண் குடிமக்களும் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உக்ரைனின் பல நகரங்கள் மீது குண்டு வீசியும்,தரைப்படை வழியாக நுழைந்தும்  ரஷ்யா பல்முனை தாக்குதல் நடத்தி வருகிறது.இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.அதே சமயம்,உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்தி,பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என ரஷ்யா அதிபர் விளாடிமிரிடம் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை … Read more

இன்று முதல் ஜன.18 ஆம் தேதி வரை…அனுமதி இல்லை – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,இன்று முதல் (14-01-2022) முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில்,கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் … Read more

ஜனவரி 10 ஆம் தேதி வரை…1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு – வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றும் வேகமாகப் பரவி வருகிறது.இதன்காரணமாக,இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் … Read more

“கோவையில் இரு தினங்களுக்கு இதற்கு தடை” – காவல்துறை உத்தரவு!

கோவை:இரு தினங்களுக்கு ட்ரோன் கேமரா பறக்க தடை விதித்து கோவை மாநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவையில் நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இருப்பதால் இரு தினங்களுக்கு கோவை நகரில் ட்ரோன் கேமரா பறக்க தடை விதித்து கோவை மாநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக,கோவை மாநகர காவல்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: “வருகின்ற 22.11.2021 மற்றும் 23.11.2021 ஆகிய தேதிகளில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் … Read more

பெண்கள் வேலைக்கு செல்ல தடை…மெல்ல வெளிவரும் தலிபான்களின் உண்மை முகம்…!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்கு செல்ல தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.  ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில்,பெண்களை ஒடுக்க மாட்டோம் என்று தலிபான்கள் வாக்குறுதி அளித்தனர்.ஆனால்,அதற்கு மாறாக தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் கல்வி கற்பதற்கும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு மந்திரி சபையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் கல்வித்துறை மந்திரி அப்துல் பாகி ஹக்கானி பெண்களின் உயர்கல்வி குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்டார்.அதன்படி, பெண்கள் பல்கலைக்கழகங்களில் … Read more