#BREAKING: தமிழகத்தில் மீண்டும் ஒரே நாளில் 2,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு.!

The number of corona infections in Tamil Nadu has crossed 2,000 in a single day, according to the health department.

தமிழகத்தில் மீண்டும் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. தமிழகத்தில் சற்று குறைந்து இருந்த பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த இன்று ஒரே நாளில் 2,279 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,81,752 ஆக அதிகரித்துள்ளது. இன்று 14 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், மொத்தம் இதுவரை 12,684 பேர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் 1,352 பேர் குணமடைந்து உள்ளதால், இதுவரை 8,55,085 பேர் வீடு திரும்பியுள்ளார்கள்.

குறிப்பாக இன்று அதிகபட்சமாக சென்னையில் 815 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 13,983 ஆக உள்ளது. மேலும், இன்று 80,704 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 1,94,28,501 பேரின் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

unknown node