#BREAKING: கோவை கார் வெடிப்பு – கைதான 6 பேருக்கும் நவ.22 வரை நீதிமன்ற காவல்!

Default Image

கார் வெடிப்பு வழக்கில் கைதிகள் 6 பேரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க இன்று மனு தாக்கல் செய்ய உள்ளது என்ஐஏ.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரை வரும் 22-ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான 6 பேருக்கும் வரும் 22-ஆம் தேதி வரை நீதிமன்றம் காவல் அளித்து பூவிருந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 6 பேரும் பூவிருந்தமல்லி என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு) சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். என்.ஐ.ஏ காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருந்த நிலையில், புழல் சிறையில் இருந்து 6 பேரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரை வரும் 22-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கைதிகள் 6 பேரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க இன்று மனு தாக்கல் செய்ய உள்ளது என்ஐஏ.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்