#BREAKING: அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் – நீதிமன்றம் உத்தரவு!

Madurai branch of the High Court orders transfer of Tanjore school student suicide case to CBI.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், தற்போது அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்றம் மதுரை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி தஞ்சையில் படித்து வந்த நிலையில், சமீபத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதை தொடர்ந்து, மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது.

மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து, உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இன்று வழக்கு பட்டியலிடப்படாத நிலையிலும் அவசர அவசரமாக வழக்கை எடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

செல்போனை காவல்துறையினர் பெற்ற உடனேயே தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனிடையே, மதம் மாற கட்டாயப்படுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பாஜக குற்றசாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.