#BREAKING: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக!

Release of the list of AIADMK candidates contesting in the local government elections to be held in 9 districts in Tamil Nadu.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 இடங்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 இடங்களுக்கும், ராணிப்பேட்டை 9, விழுப்புரம் 24, தென்காசி 12 இடங்களுக்கு மாவட்ட ஊராட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே அதிமுக கூட்டணியில் இருந்த பாமக வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையிலும், கூட்டணியில் உள்ள பாஜக உடன் இடப் பங்கீடு முடிவடையாத சூழல் இருக்கும் நிலையில், அதிமுக தற்போது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node