சென்னை: தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி தேர்தல் என்பது நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருட இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆலோசனை கூட்டத்தை முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் மேற்கொண்டார். இந்த தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தி முடிக்கும். தற்போது தேர்தல் தொடர்பான […]
கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திருவிக என்பவரை அழைத்துக்கொண்டு, முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது காரில் வந்த சிலர் முன்னாள் அமைச்சர் காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். மேலும், […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. ஒரு மாநகராட்சி ஒரு […]
நகர்ப்புற உள்ளாட்சியில் சென்னை மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் 100 வேட்பாளர்களின் பட்டியலை தேமுதிக வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது தேமுதிக. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் நிலையில், திருப்பூரை தொடர்ந்து சென்னைக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தேமுதிக திருப்பூர் மாநகராட்சியில் 24 வார்டுகளில் போட்டியிடும் […]
தமிழகத்தில் 11ம் தேதி வரை பேரணிக்கு தடை விதிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் […]
பாரதிய ஜனதா கட்சி, தனியாக களம் இறங்குவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – பாஜக இடையே இடப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், அதிமுக கூட்டணி பாஜக இடம்பெறுமா அல்லது வெளியேறுமா என்று சந்தேகம் எழுந்தது. இந்த சமயத்தில் சென்னை கமலாயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து […]
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான இடப்பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கூட்டணி, இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக ஈடுபட்டு வருகிறது. ஒருபுறம் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கும் பணி தீவிரமடைந்துள்ளன. சென்னை மாநகராட்சியை பொறுத்தளவில் 200 வார்டுகள் உள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, மதிமுக 2, மனிதநேய […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளராக ரமேஷ் சென்னிதலா நியமனம். தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு கட்சிகள் கூட்டணி, இடப்பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் என தேர்தல் பணியில் தீவிரம்காட்டி வருகிறது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளராக கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார் என்று வேணுகோபால் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இட பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையே இன்று மாலை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோருடன் உள்ளாட்சி தேர்தலில் இடங்களை பங்கீடு செய்வது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மண்டலத்திற்கு குறைந்தபட்சம் ஒரு இடமாக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று மார்சிஸ்ட் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர்வோம் என அதிமுக மற்றும் பாஜக அறிவிப்பு. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி, இடப்பங்கீடு குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். இந்த […]
ஜனவரி 31-க்குள் வேட்பாளர் பட்டியலை தாக்கல் செய்ய மாவட்ட செயலர்களுக்கு திமுக தலைமை உத்தரவு. ஜனவரி 31-க்குள் கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீட்டை முடிவு செய்ய மாவட்டச் செயலாளர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்கள் தவிர திமுக போட்டியிடும் இடங்களை முறைபடுத்தி, அவற்றில் போட்டியிடும் கழக வேட்பாளர் பெயர் பட்டியலை 2 நாட்களுக்குள் மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுரைத்துள்ளார். கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் சுமூகமாக […]
தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி, இடப்பங்கீடு குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் சுமார் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். […]
ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தால், தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை. ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் உரியவாறு பதவியில் இருந்து விலகாமல் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தால் ஏற்கனவே வகிக்கும் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என்றும் உரிய பதவியில் இருந்து விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் மாநில தேர்தல் […]
வேட்புமனு பரிசீலனையில் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட தேர்தல் அலுவலர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருடனான ஆலோசனையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஆணையர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக, முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வேட்புமனு பரிசீலனையில் எந்தவித விருப்பு வெறுப்புமின்றி நடுநிலையோடு […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் நாளை ஆலோசனை. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, அரசியல் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், […]
நாளை மறுநாள் சனிக்கிழமை பணி நாள் என்பதால் அன்றைய தினமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம். தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் நேற்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார். அதன்படி, வேட்பு மனுத்தாக்கல் வரும் 28 தேதியும், வேட்பு மனுத் தாக்கல் […]
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையுமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 15 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகள், 121 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகள், 528 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகள் ஆகியவற்றுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்தக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக் கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற விதிமீறல்களால் மாநில தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது என்று மனுவில் தெரிவித்துள்ளார். வேட்புமனுவில் எத்தனை பக்கங்கள் உள்ளன என்பதற்கும் சான்றளிக்க வேண்டும் என்றும் […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை நவம்பர் 1ம் தேதி வெளியிட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர், மாவட்ட […]
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் முறைகேடு நடப்பதாக மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் பாபு முருகவேல் புகார் மனு. வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடைபெற வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக வழக்கறிஞர் அணி பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் வெளி நபர்கள் அனுமதிக்க கூடாது என்றும் அதிமுக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் […]