#BREAKING : சென்னையில் 26-ம் தேதி 200 வார்டுகளில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்..!

சென்னையில் 26-ம் தேதி 200 வார்டுகளில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்.

சென்னையில் 26-ம் தேதி 200 வார்டுகளில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வண்ணம், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில், நாளை மறுநாள் 400 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு முகாம்கள், அந்தந்த வார்டு ஆரம்ப சுகாதார மையங்கள், சமுதாய நல மருத்துவமனைகள், மினி கிளினிக்குகளிலும், வார்டு அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் நடத்தப்படும் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதா நபர்கள் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

unknown node