சென்னை மாநகராட்சியில் வட்டியில்லாமல் சொத்து வரி செலுத்த ஜன.15 வரை அவகாசம் நீடிக்க தீர்மானம். சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசத்தை ஜனவரி 15-ஆம் தேதி வரை நீடிக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதுபோன்று, பணிகள் துறைக்கு, நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றவும், கட்டணங்களை மாற்றி அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் புதிய நாய் இனக் கட்டுப்பாடு மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சி வருவாய் இழப்பு என மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவர் தகவல். சென்னையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்றும் பயன்பாட்டில் இல்லாத அம்மா உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், சென்னையில் அம்மா உணவகங்கள் ரூ.786 […]
சென்னை மாநகர பகுதிகளில் நடப்பாண்டில் 5447 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 5,447 மாடுகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகள் மாநகராட்சி பொதுசுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டது என்றும் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளுக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. மேலும், அக்.1ம் தேதி […]
கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை என மாநகராட்சி எச்சரிக்கை. கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. பிளாஸ்டிக் இல்லா கடற்கரைகளாக பராமரிக்கப்படும் 3 இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காலை, மாலை என இரு வேளைகளில் […]
சென்னை:இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில்,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக,வணிக […]
மாநகராட்சி வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை. மாநகராட்சி வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையோரப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் […]
பொதுமக்கள் குப்பைக் கழிவுகளை தரம்பிரித்து வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று நோட்டிஸ். அந்த நோட்டீஸில், சென்னை மாநகரை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை (Wet Waste/Biodegradable Waste and Dry Waste Non-Biodegradable Waste) என வகைப் பிரித்து அவற்றை தினசரி வீடு தோறும் வரும் மாநகராட்சி தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. தீங்கு விளைவிக்ககூடிய […]
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு. சென்னை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு பிறகு, மேயர் பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவரான 44-ஆவது வார்டு கவுன்சிலர் சர்பஜெயாதாஸ் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக ஏற்கனவே சோதனை முறையில் நடந்து முடிந்த […]
சென்னை மாநகராட்சியின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சியின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவரான 44-ஆவது வார்டு கவுன்சிலர் சர்பஜெயாதாஸ் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சென்னை மேயர் பிரியா ராஜன் தலைமையில் பட்ஜெட் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து […]
சென்னையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை செயல்படுத்த அமைக்கப்பட்ட ஆலோசனை குழு மறுசீரமைப்பு. சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான ஆலோசனை குழுவை மறுசீரமைப்பு செய்து, அதற்கான உறுப்பினர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான வழிகாட்டுதல் குழு தலைவராக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழிகாட்டு குழுவின் துணை தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை மேயர் பிரியா ராஜன், எம்எல்ஏ எழிலன், மாநகராட்சி […]
நீதிமன்ற உத்தரவை மதிக்காவிடில் சிறை தண்டனையே பிரதானமாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை தண்டனையே பிரதானமாக இருக்க இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காத செயல் என்பது பணியில் நேர்மையுடன் செயல்படாததை காட்டுகிறது என்றும் அரசு பதவியை, லஞ்சம் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய பதவி என நினைப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் எனவும் நீதிபதிகள் கருத்து கூறினார். கடமை தவறியதாக […]
சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது. திமுக நிர்வாகிகள், திமுக சார்பில் போட்டியிடும் உறுப்பினர்கள் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் – ந.இராமலிங்கம், துணை தலைவர்கள் – ஏஆர்பிஎம்.காமராஜ், ராஜகோபால், மாநகராட்சி மண்டலக்குழு கொறடா – ஏ.நாகராஜன், பொருளாளர் – வேளச்சேரி பி.மணிமாறன் ஆகியோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை. சென்னை மாநகராட்சியில் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திட்ட அனுமதியில் குறிப்பிட்டவாறு அளவு, விவரக் குறிப்பின் அடிப்படையில் கட்டடங்களை கட்ட வேண்டும். மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் மார்ச் 17 முதல் 24 […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிட பிரபல கானா பாடகர் கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6-ஆவது மண்டலம், 72-ஆவது வார்டில் சுயேட்சையாக போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே கடந்த 2006 மற்றும் 2011 தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்திருந்த நிலையில், தற்போது 3-வது முறையாக அதே வார்டில் போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் திமுக 164 வார்டுகளில் போட்டியிடும் என தகவல். தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி, இடப்பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பை என தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தலுக்காக இடங்கள் ஒதுக்கீடு செய்து, வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திமுக சார்பாக போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 8வது கட்ட […]
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் 6 வார்டுகள் ஒதுக்கீடு. சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உரிய இடஒதுக்கீடு கோரி கூட்டணி கட்சிகள், முதன்மை கட்சியான திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், அவற்றில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் 6 வார்டுகள் ஒதுக்கீடு […]
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின்படி நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. அதனடிப்படையில் 2019 கடந்த மே மாதம் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி, சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அடுத்த மாதம் […]
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் தொழில் உரிமம் ரத்து. இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விதத்தில் தமிழ்நாடு அரசால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1966, பிரிவு-5ண் கீழ் 2019ம் ஆண்டு முதல் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் உபயோகித்தல் ஆகியவற்றிற்கு முற்றிலும் […]
சென்னையில் 26-ம் தேதி 200 வார்டுகளில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வண்ணம், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில், நாளை மறுநாள் 400 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு முகாம்கள், அந்தந்த வார்டு ஆரம்ப சுகாதார மையங்கள், சமுதாய நல மருத்துவமனைகள், மினி கிளினிக்குகளிலும், வார்டு […]
சென்னை முழுவதும் தடுப்பூசி முகாம் அமைக்க மாநகராட்சி முடிவு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்களை மேற்கொண்டது. அதனடிப்படையில், தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை முழுவதும் தடுப்பூசி முகாம் அமைக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, 200 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில், […]