#BREAKING: மேலும் 12 தமிழக மீனவர்கள் கைது!

The Sri Lankan Navy has arrested 12 more fishermen from Tamil Nadu for fishing across the border.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த மேலும் 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மண்டபம் தென்கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை கைது செய்த நிலையில், 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேர் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை மொத்தம் 54 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 12 விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 42 மீனவர்கள் கைது செய்யப்பட்டு பரபரப்பு அடங்குவதற்கு முன் மேலும் 12 மீனவர்கள் சிறைபிடித்தனர். கைது செய்யப்பட்ட 12 மீனவர்களிடம் மன்னார் கடற்படை முகாமில் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.