Fisherman : இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 24 பேர் விடுதலை. கடந்த மார்ச் மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் மீனவர்களை விடுவிக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இதன்பின், 19 மீனவர்களையும் விடுதலை செய்து இலங்கை […]
ராமேஸ்வரம்:மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது. தமிழகத்தில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.ராமேஷ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில்,நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளதாகவும், மேலும்,அவர்களது ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.தொடர்ந்து இலங்கை கடற்படை இவ்வாறு கைது நடவடிக்கையை மேற்கொள்வது தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. […]
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம்,மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.இந்நிலையில் நெடுந்தீவு அருகே ஒரு விசைப்படகில் மீனவர்கள் மீன்படித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அதைபோல்,தலைமன்னார் அருகே மற்றொரு விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.குறிப்பாக மொத்தம் 16 பேரை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும்,அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் […]
கடந்த பிப்.22 ஆம் தேதி அன்று கொச்சி துறைமுகத்தில் இருந்து 33 மீனவர்கள், 3 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மூலம் மீன்பிடிக்கச் சென்ற நிலையில்,7-3-2022 அன்று அவர்கள் செஷல்ஸ் கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி,செல்ஸ் நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்,இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும்,அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு , தமிழ்நாடு […]
கடந்த மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விடுதலை விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாகை:வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல். நாகை மாவட்டம் கோடியக்கரை கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புஷ்பவனம் மீனவர்கள் மீது இன்று காலை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது புஷ்பவனம் பகுதி மீனவர்களான பன்னீர்செல்வம்,நாகமுத்து,ராஜேந்திரன் ஆகியோர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கினர். ரப்பர் கட்டை,இரும்பு பைப்,அரிவாள் போன்ற ஆயுதங்களால் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகவும்,மேலும்,படகில் இருந்த 300 கிலோ மீன்பிடி வலைகள் உள்பட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்து […]
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு. கடந்த சில தினங்களுக்கு முன்பு எல்லைதாண்டி மீன் பிடித்ததாக நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 68 பேரை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் 10 படகுகளையும் பறிமுதல் செய்தது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் யாழ்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவிடக்கோரி முதல்வர் முக ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை […]
இலங்கை கடற்படையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விரைவில் வந்து விடுவார்கள்,அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மத்திய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் உறுதி அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 68 தமிழக மீனவர்கள் மற்றும் 75 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இதனையடுத்து,கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் […]
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த மேலும் 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மண்டபம் தென்கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை கைது செய்த நிலையில், 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேர் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
இலங்கை கடற்படை நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து விரட்டியடித்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மீன்வளத்துறை அலுவலகத்தில் 498 டோக்கன்களை பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நெடுந்தீவு அருகே 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி வலைகளை அறுத்து மீனவர்களை விரட்டியடித்தனர். மீனவர்கள் இரட்டை மடி வலை பயன்படுத்துவதே பிரச்சினைக்கு காரணம் என்று மீனவர் சங்கத் தலைவர் […]
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்… நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 2படகுகளுடன் மீன்பிடிக்க சென்ற 12 தமிழக மீனவர்கள் இந்திய பெருங்கடலில் உள்ள நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டனர்.