சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சிதம்பரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
unknown nodeகடலூர் மாவட்டம் மதுராந்தகநல்லூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற இளைஞர், தீர்த்தம்பாளையம் என்ற கிராமத்திற்கு கொத்தனார் வேலைக்காக சென்றுள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த ராமு என்பவரது மகளான இரண்டரை வயதுச் சிறுமியை பழனிச்சாமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கைது செய்யப்பட்டார்.
unknown nodeஇந்த வழக்கை ஓராண்டு காலமாக விசாரித்து வந்த சிதம்பரம் மகளிர் நீதிமன்றம், சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பழனிச்சாமிக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மற்றொரு பிரிவில் 5 ஆண்டுகள் சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
DINADUVADU