யானை மீது தீ வைத்த கொடூரன்., மனதை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி.!

யானை மீது டயரில் தீக்கொளுத்தி வீசிய இரண்டு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மூன்று மாத காலமாக முதுகில் காயத்துடன் சுற்றித்திரிந்து ஜனவரி 19-ல் உயிரிழந்த யானையின் மீது தீ கொளுத்தப்பட்ட டயரை வீசும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியிடுபட்டுள்ளது. இந்த வீடியோ காட்சியை பார்க்கும் போது பலருக்கும் மிகுந்த வேதனையை தருகிறது.
இதனையடுத்து, இந்த கொடூர செயலை செய்த, நீலகிரி மாவநல்லா பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்ததாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். டயரில் தீ வைத்து யானையின் மீது வீசிய சம்பவத்தில் ரிசார்ட் உரிமையாளர் ரைமன் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மசினகுடி பகுதியில் காதில் தீக்காயம் பட்டு உயிரிழந்த யானை மீது இரு சக்கர வாகனத்தின் டயரில் தீப்பற்றி யானை மீது வீசும் வீடியோ.!#elephant #Nilgiris #ElephantDeath pic.twitter.com/ceybXPUt9R
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) January 22, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025