யானை மீது டயரில் தீக்கொளுத்தி வீசிய இரண்டு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மூன்று மாத காலமாக முதுகில் காயத்துடன் சுற்றித்திரிந்து ஜனவரி 19-ல் உயிரிழந்த யானையின் மீது தீ கொளுத்தப்பட்ட டயரை வீசும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியிடுபட்டுள்ளது. இந்த வீடியோ காட்சியை பார்க்கும் போது பலருக்கும் மிகுந்த வேதனையை தருகிறது. இதனையடுத்து, இந்த கொடூர செயலை செய்த, நீலகிரி மாவநல்லா பகுதியை சேர்ந்த 2 பேரை கைது […]