திமுக கூட்டணியில் அடுத்த விரிசல்! விலகியதாக அறிவித்தது மதிமுக!

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து விலகுவதாக சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Hero Image

சென்னை : தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்பமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) கூட்டணியில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை அண்ணா நகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில், திமுக கூட்டணியில் இருந்து முற்றிலும் வெளியேறுவது என்ற மிக முக்கியமான அரசியல் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்பொழுது இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே மதிமுகவினர் எதிர்க்கட்சியான திமுகவை பல்வேறு மேடைகளில் கடுமையாக விமர்சித்தும், அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசியல் நகர்வுகளைத் தொடர்ந்து புகழ்ந்தும் பேசி வந்தனர்.

இந்தச் சூழலில், ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், இடதுசாரிகள் (கம்யூனிஸ்ட் கட்சிகள்) மற்றும் ஐயூஎம்எல் (IUML) ஆகிய கட்சிகள் அடுத்தடுத்து வெளியேறியதைத் தொடர்ந்து, தற்பொழுது மதிமுகவும் அக்கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.

திமுக கூட்டணியில் அடுத்த விரிசல்! விலகியதாக அறிவித்தது மதிமுக!