அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது தரவேண்டும் – திருமாவளவன்

VCK wants Bharat Ratna award for Anna Chairman Thol Thirumavalavan said

பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இன்று பேரறிஞர் அண்ணாவின் 52-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இவரது நினைவு தினத்திற்கு அரசியல் தலைவர்கள் பலர் நினைவிடத்துக்கு சென்றும், அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தி புகழாரம் சூட்டி வருகின்றனர். அந்தவகையில், பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்பு தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்திய அளவில் திசை வழியை காட்டியுள்ளது. பழமைவாதத்தில் இருந்து புரட்சிகரமான அரசியலை நோக்கி மடைமாற்றம் செய்த மகத்தான தலைவர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.