#Alert:தமிழகத்தில் இன்று இடி,மின்னலுடன் கனமழை;சூறாவளிக் காற்று -எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?..!

Default Image

வட உள்தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதன்படி,நீலகிரி,கோவை,திருப்பூர்,ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம்,திருப்பத்தூர்,நாமக்கல்,வேலூர்,ராணிப்பேட்டை,திருவள்ளூர், திருவண்ணாமலை,காஞ்சிபுரம்,கள்ளக்குறிச்சி,திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும்,தென் கிழக்கு அரபிக்கடல்,இலட்சதீவு,மாலத்தீவு,கர்நாடகா கேரளா கடலோர பகுதிகள்,தெற்கு வங்கக்கடல்,அந்தமான், மத்திய கிழக்கு வங்கக்கடல்,மன்னார் வளைகுடா,குமரிக்கடல்பகுதி,தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் வருகின்ற மே 22 ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்