40 தொகுதிகளிலும் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெறும் -பியூஸ் கோயல்

This news gives information about AIDMK and BJP alliance will win in 40 constituencies -Piyush Goyal

மக்களவை தேர்தலில் அதிமுக-பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது என்று  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெறும் . கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது என்று  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.