தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டு…!

தண்டவாளத்தில் விழுந்த 6 வயது குழந்தையை துணிச்சலுடன் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் செல்கேவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வாங்கனி ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பாரத்தில் கண்பார்வை தெரியாத பெண் ஒருவர்,தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்தப் பெண்ணின் குழந்தை, திடீரென்று கால்தவறி தண்டவாளத்தில் விழுந்தது.அப்போது அதே தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.பார்வை தெரியாததனால்,குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் அந்தப் பெண் சத்தமாக குரல் எழுப்பினார். … Read more

புறப்பட்ட ரயில்; குழந்தைக்கு ஓடி சென்று பால் வாங்கி கொடுத்த பாதுகாப்பு படைகாவலர்.!

ஓடும் ரயிலில் 3 வயது குழந்தைக்கு ஓடி சென்று பால் வாங்கி கொடுத்த பாதுகாப்பு படைகாவலருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் கைகளில் காசு இல்லாமல் பட்டினியில் வாடும் இவர்களுக்காக இயக்கப்பட்ட பில்காம்-கோரக்பூர் சிறப்பு ரயிலில் … Read more

ரயில்வே பட்ஜெட்: இடைக்கால பட்ஜெட் தாக்கலில் ரயில்வே துறைக்கு ரூ .65,000 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஆனது கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே துறைக்கான நிதி பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில்,கடந்த சில வருடங்களாக மொத்த பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யப்படுகிறது.இந்த பட்ஜெட்டினை மத்திய ரயில்வே துறை அமைச்சர் தாக்கல் செய்வார். 2019- 2020 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கலில் ரயில்வே துறைக்கு 65,000 கோடி ரூபாயானது ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பேசிய ரயில்வே துறை அமைச்சர்  பியூஸ் கோயல் ரயில்வே … Read more

40 தொகுதிகளிலும் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெறும் -பியூஸ் கோயல்

மக்களவை தேர்தலில் அதிமுக-பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.  கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது என்று  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி … Read more