இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்.
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டுள்ளது. ஹரிஹரன் உள்பட 4 பேர் தொடர்பான 440 பக்க குற்றப்பத்திரிகை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பள்ளி மாணவர்கள் 4 பேர் தொடர்பாக 240 பக்க குற்றப்பத்திரிகை விருதுநகர் இளம்சிறார் குழுமத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு குற்றப்பத்திரிகையையும் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.
இதனிடையே, விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை 8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த மார்ச் மாதம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ஹரிஹரன், பர்மா காலனி சேர்ந்த ஜூனத்அகமது, பிரவீன், மாடசாமி மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் உள்பட 8 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ஜூனத் அகமது, பிரவீன், மாடசாமி ஆகிய 4 பேர் மதுரை மத்திய சிறையிலும், பள்ளி மாணவர் 4 பேரும் மதுரை கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். இதன்பின் அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 மாணவர்களையும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது. இந்நிலையில், இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டுள்ளது என்பதுய குறிப்பிடத்தக்கது.