தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 8-ஆம் வகுப்பு மாணவி..!

Default Image

சென்னையில் பெற்றோர்கள் தண்டிப்பார்கள் என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 8-ஆம் வகுப்பு சிறுமி. 

சென்னை மதுரவாயல் சீமந்தம்மன் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன். இவருக்கு 12 வயதில் சர்னி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயந்து வருகிறார்.

இந்த நிலையில் சர்னிக்கு  கமலேஷ் என்ற தம்பி உள்ளார். இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்த பின் சர்னி வீட்டிற்கு தனியாக சென்ற நிலையில் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தனது தம்பியை படிப்பதற்காக அழைத்துள்ளார். அவன் சரியாக படிக்காததால் தம்பி தாக்கியுள்ளார். மேலும் அவர் சரியாக பாடம் படிக்கவில்லை என்றும், தனது தந்தையிடம் செல்போனில் தகவல் அளித்துள்ளார்.

இதற்கிடையே தம்பியை தாக்கியதால் பெற்றோர்கள் தன்னை தண்டிப்பார்கள் என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்