Republic Day 2024 : சென்னையில் குடியரசு தினவிழா.... ஆளுநர் R.N.ரவி தேசிய கொடியேற்றி மரியாதை.!

இன்று 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  சுதந்திர தினத்திற்கு நாட்டின் பிரதமர், மாநில முதல்வர்கள் கொடியேற்றி வைப்பது

75th Republic day - Governor RN Ravi - CM MK Stalin

இன்று 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  சுதந்திர தினத்திற்கு நாட்டின் பிரதமர், மாநில முதல்வர்கள் கொடியேற்றி வைப்பது போல, குடியரசு தின விழாவுக்கு  நாட்டின் குடியரசு தலைவர், மாநில ஆளுநர்கள் தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துவர்.

தமிழக தலைநகர் சென்னையில், தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, மெரினாவில் காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் அருகே உள்ள விழா ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Republic Day 2024 : நீதித்துறையின் அடையாளம் ராமர் கோயில்… குடியரசு தலைவர் உரை.!

இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்று உள்ளனர். தற்போது கொடியேற்ற நிகழ்வுகள் முடிந்த பின்னர் முப்படை வீரர்கள், பள்ளி கல்லூரி தேசிய மாணவர் படையினர் , உள்ளிட்ட பல்வேறு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மத நல்லிணக்க விருது, தமிழக அரசின் சிறப்பு விருது, வீர தீர செயல்களுக்கான விருது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் வழங்கியுள்ளனர்.