மெரினா கடற்கரை செல்வதற்கு அனுமதி கொடுத்த முதல் நாளே 3 மாணவர்கள் மாயம்...!

Three students have been stranded at sea since the first day of Marina Beach opening.

மெரினா கடற்கரை செல்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட முதல் நாளே கடலில் சிக்கி 3 மாணவர்கள் மாயமாகியுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளதையடுத்து மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மன நிலை கருதி தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அதன்படி இன்று முதல் தமிழகத்தில் உள்ள சில கடற்கரைகளுக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் பல நாட்களுக்கு பின் கடற்கரைக்கு செல்லும் ஆர்வத்தில் உற்சாகமாக கடற்கரைகளுக்கு சென்று வருகின்றனர். இன்று மெரினா கடற்கரையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சென்னை வேளச்சேரியை சேர்ந்த 3 மாணவர்கள் அலையில்  அடித்து செல்லப்பட்டுள்ளனர். கடற்கரைக்கு செல்வதற்கு அனுமதி கொடுத்த முதல் நாளே 3 பேர் கடல் அலையில் சிக்கி காணாமல் போயுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் இறங்கியுள்ளனர்.