மெரினா கடற்கரை செல்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட முதல் நாளே கடலில் சிக்கி 3 மாணவர்கள் மாயமாகியுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளதையடுத்து மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மன நிலை கருதி தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அதன்படி இன்று முதல் தமிழகத்தில் உள்ள சில கடற்கரைகளுக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி […]
தூத்துக்குடி பிரைண்ட் நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் சந்தாணம். இவரது மனைவி மாலதி (வயது 24). இவர்களுக்கு ஆனந்தகுமார் (3) என்ற மகனும், இந்துமதி(2) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று சந்தாணம் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலையில் வந்து பார்த்தபோது மாலதியை காணவில்லை. மேலும் 2 குழந்தைகளும் மாயமாகியிருந்தனர். அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து சந்தாணம் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாலதி எங்கு […]