உத்தரகாண்ட் மாநில ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த மதராஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானி பகுதியில் இஸ்லாமியர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இஸ்லாமியர்கள் வசித்து வந்த பகுதி ரயில்வே துறைக்கு சொந்தமானது என கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரகாண்ட் நீதிமன்றம் அறிவித்தது. இதனால், அங்கிருந்து அனைவரும் காலி செய்யவேண்டும், இல்லையென்றால் […]
இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், நாளை காலை முதல் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. போராட்ட களம் வன்முறையாக வெடித்ததில் பொது சொத்துக்கள் சேதம், அரசியல் தலைவர்கள் வீடுகளில் மீது […]
பாட்டியாலாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிவசேனா தலைவர் ஹரிஷ் சிங்லா கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் காளியம்மன் கோவில் அருகே இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் நிலவிய நிலையில் தொடக்கத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் சற்று நேரத்தில் கைகலப்பில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக […]
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மருத்துவத்துறை செயலர் விளக்கம். தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், நாட்டில் மீண்டும் கொரோனா பாவல் சற்று தலைதூக்க ஆரம்பித்து உள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை […]
உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிக அளவில் காணப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன், டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு நகரில் உள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவின் வீட்டிற்கு அருகில் நேற்று பிற்பகல் முதல் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அங்கு போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து போலீசார் கண்ணீர் புகை மற்றும் […]
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. சீனாவின் பல நகரங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் புதியதாக 5,280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா நோய்த்தொற்று […]
கடந்த 2 வாரங்களாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில்,இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.அதன்படி,இன்று முதல் திங்கள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில்,இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள […]
தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே இதுகுறித்து முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகம் முழுவதும், இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் […]
நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் கவிதா ராமு அவர்கள் நேற்று காலை புதுக்கோட்டை நகரில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு சைக்கிளிலேயே பயணம் செய்து ஆய்வு. தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே இதுகுறித்து முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகம் முழுவது, இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு […]
தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே இதுகுறித்து முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகம் முழுவது, இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய […]
ஊரடங்கின்போது அவசர உதவி தேவைப்படுவோர் உதவி எண்ணை வெளியிட்டுள்ளது சென்னை காவல்துறை. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அமலில் இருந்து வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு பல்வேறு நடவடிக்கைகளை சென்னை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கின்போது அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண் 100 மற்றும் 112 […]
சென்னை:கோயம்பேடு மார்க்கெட் இன்று முதல் அதிகாலை 1 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர(இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,சென்னை […]
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கவும்,மாணவச் செல்வங்களை பாதுகாக்கவும் 10, 11, 12 வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும்,மக்களைக் காக்க மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளில்,அத்தியாவசிய பணிகளான பால்,பத்திரிகை […]
கொரோனா தொற்று பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் அமலாக உள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கான […]
தமிழகத்தில் ஜன.10-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றும் வேகமாகப் பரவி வருகிறது. இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சமுதாய, கலாச்சார மற்றும் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிப்பது குறித்து மருத்துவ வல்லுனர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை. தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன்,அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இன்று காலை 11 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் […]
ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சில மாதங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் எனும் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. ஓமிக்ரான் தொற்று இதுவரை 50 நாடுகளுக்குப் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஓமிக்ரான் பரவுவதை தீவிரமாக தடுக்க அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள […]
இன்றைய சூழலில் மக்களாலும், அரசாலும் இன்னொரு ஊரடங்கை சமாளிக்க முடியாது. எனவே, ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில், தற்போது ஓமைக்ரான் வகை வைரஸ் பரவுவதால், தமிழகத்தில் இந்த வைரஸ் பரவாத வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில்,இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது […]
தமிழகத்தில் டிச.15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் டிச.15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு – கேரளா இடையே […]
ஜம்மு-காஷ்மீரில் கொரோனா பாதிப்பு காரணமாக ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் இன்றிலிருந்து 10 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கை விதித்துள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம், தனித்த மளிகை/காய்கறி/இறைச்சி/பால் கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் மற்றும் செயல்படும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்ரீநகரின் மாவட்ட மாஜிஸ்திரேட் முகமது […]