மக்களே உஷார் ! தமிழகத்தில் இன்று 2654 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 2,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 2,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

நேற்று 2,533 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 2,654 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,066 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.இதனால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15,616 ஆக அதிகரித்துள்ளது.இன்று மட்டும் 1,542 குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.