10, 12-ம் வகுப்புகளுக்கு 19-ம் முதல் பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு..!

The government has announced that schools will be open only for classes 10 and 12 from the 19th in view of future welfare.

பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் ஜனவரி 6 முதல் 8 வரை கருத்து கோரப்பட்டது. இக்கூட்டங்களில் கலந்துகொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க வேண்டும் என 95 சதவீதப் பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, வருங்கால நலனை கருத்தில் கொண்டும் வரும் 19ஆம் தேதி முதல் 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறக்கப்படும் போது ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக விட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகளை வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி அரசு எடுத்துவரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பினை  தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தனது முதல்வர் தெரிவித்துள்ளார்