சென்னையில் பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் 108 ஏழை, எளியவர்களுக்கு இலவச திருமண விழா நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோஷம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.
unknown nodeபின்னர் மணமக்களுக்கு 4 கிராம் தங்கம், வீட்டிற்கு தேவையான பாத்திரங்கள், ஸ்டவ், பாய், தலையணை, போர்வை, பெட்டி, உள்ளிட்டவை சீர்வரிசையாக வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய அவர், 2020-2021ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 795 பேருக்கு, 415 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சென்றனர்.