Tamilnadu Corona Update: இன்று புதிதாக 5,967 பேருக்கு கொரோனா – 97 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் புதிதாக 5,967 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,85,352 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 5,967 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,85,352 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,967 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, மொத்தமாக 3,85,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,278 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,26,677 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 97 பேர் பலியாகியுள்ளனர். அதில், 30 பேர் தனியார் மருத்துவமனையிலும், 67 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,420 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று 6,129 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,25,456 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70,023 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 42,76,640 -ஐ கடந்துள்ளது. மேலும் 53,282 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

unknown node
Tamilnadu Corona Update: இன்று புதிதாக 5,967 பேருக்கு கொரோனா – 97 பேர் உயிரிழப்பு.!