தமிழகத்தில் இந்த பகுதியில் சலூன் கடைகளை திறக்கலாம் – முதலமைச்சர்

தமிழகத்தில் ஊரக பகுதிகளில் இருக்கும் சலூன் கடைகளை திறக்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவு  .

தமிழகத்தில் ஊரக பகுதிகளில் இருக்கும் சலூன் கடைகளை திறக்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவு  .

மாநகராட்சி ,நகராட்சி ,பேரூராட்சி பகுதிகளை தவிரஊரக பகுதிகளில் மட்டும்சலூன் கடைகளை நாளை முதல் ( 19.05.20) திறக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது .கடை நடத்துவோர் மற்றும் கடைக்கு வரும் நபர்கள் தனிமனித இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும்  என அறிவுறுத்தப்பட்டுள்ளது .மேலும் முடிதிருத்தும் பணியில் ஈடுபடுவோர் கையுறை ,முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சலூன் கடைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் விரிவான அறிக்கையாக பின்னர் வெளியிடப்படும் என்று        தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது .

unknown node