கொரோனாவிலிருந்து மீண்ட 29 தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம் – விஜயபாஸ்கர் பாராட்டு!

கொரோனாவில் இருந்து குணமடைந்த 29 தமிழ்நாடு தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம் செய்ததை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டு

கொரோனாவில் இருந்து குணமடைந்த 29 தமிழ்நாடு தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம் செய்ததை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்து பிறருக்கு தற்பொழுது உதவி வருகின்றனர். இந்நிலையில், இந்த கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணித் துறை வீரர்கள் 29 பேர் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்துள்ளனர்.

அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் அவர்களை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி உள்ளார்.

கொரோனாவிலிருந்து மீண்ட 29 தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம் – விஜயபாஸ்கர் பாராட்டு!