டிசம்பர் 14 முதல் அனைத்து கடற்கரையையும் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி!

Permission has been granted with restrictions to open all beaches in Tamil Nadu from December 14, capacity and not exceeding 200 persons

தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 14 முதல் அனைத்து கடற்கரையையும் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதிலுமுள்ள அனைத்து போக்குவரத்துக்கு துறை, தொழில் துறை, பள்ளிகள், கல்லூரிகள் சுற்றுலாத்தலங்கள் என மொத்தமாக கொரோனா தொற்றால் முடக்கப்பட்டது. கடந்த இரு மாதங்களாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதையும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதையும் கருத்தில் கொண்டுள்ள தமிழக அரசு சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது.

தற்பொழுது மீண்டும் இந்த மாதம் முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டிருந்தாலும், புதிய தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக அணைத்து கடற்கரைகள், மற்றும் சுற்றுலாத்தலங்களுக்கும் வருகின்ற டிசம்பர் 14 ஆம் தேதி முதல் அனுமதி கொடுக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அது போல வழிபட்டு தலங்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 200 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.