கூவத்தூர் கோஷ்டிக்கு மக்கள் தீர்ப்பு விரைவில் ஷாக் அடிக்கும்-உதயநிதி ஸ்டாலின்.!

தமிழகம் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக  மின்சாரப் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பை எடுக்கப்படாமல்

தமிழகம் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக  மின்சாரப் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பை எடுக்கப்படாமல் இருந்தது. இதனால், முந்தைய மாதங்களில் கட்டிய கட்டணத்தையே கட்ட அரசு கூறியது.

இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு சேர்த்து மின்சாரப் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பை எடுத்ததால் கட்டணத்தில், முன்பு செலுத்திய தொகை கழித்துக்கொள்ளப்பட்டு மீதத் தொகை வசூலிக்கப்படும் எனவும் மின் வாரியம் தெரிவித்திருந்தது. கட்டணம் அதிகமாக வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த அரசு “ஊரடங்கு காலத்தில் மக்கள் முழுவதும் தினமும் வீடுகளில் முடங்கியுள்ளதால் மின்சாரம் அதிகம் உபயோகித்திருப்பதால் கட்டணம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.

unknown node

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ” ஊரடங்கால் 24 மணி நேரமும் மக்கள் வீட்டில் இருக்கின்றனர். யாருக்கும் ரீடிங் தெரிவதில்லை’ என நடத்தும் வேட்டையை நியாயப்படுத்தும் கூவத்தூர் கோஷ்டிக்கு மக்கள் தீர்ப்பு விரைவில் ஷாக் அடிக்கும். அப்போது வடக்கேயிருக்கும் உங்கள் முதலாளிகள் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது!” என கூறியுள்ளார்.