செப்டம்பர் 7-ம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணியர் இரயிலுக்கு அனுமதி.!

செப்டம்பர் 7ம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணியர் இரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

செப்டம்பர் 7ம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணியர் இரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

தமிழக முதல்வர் பல்வேறு தினங்களில் நடந்த ஆய்வு அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியருடன் நடத்தப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ குழுவினர் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையில் செப்டம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று முதல் மாவட்டங்களுக்குள் பேருந்து சேவைக்கு அனுமதி என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இதற்கிடையில் தற்போது  அரசு அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரயில் போக்குவரத்து அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முக கவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, வெளியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிப்பது உள்ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

unknown node
செப்டம்பர் 7-ம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணியர் இரயிலுக்கு அனுமதி.!