தஞ்சாவூரை சேர்ந்த கோழிக்கறி கடை உரிமையாளர் உதயா, தனது கடையை பூட்டி விட்டு திரும்புகையில் சில மர்ம நபர்கள் உதயாவை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் கோழி கறி கடை நடத்தி வந்தவர் உதயா. இவர் நேற்று இரவு வழக்கம் போல தனது கடையை மூடிவிட்டு பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
unknown nodeஅவர் கடையை பூட்டி விட்டு திரும்புகையில் அப்பகுதியில் வந்த மர்ம நபர்கள் உதயாவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் உதயா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.