தஞ்சாவூர் : இன்றும் நாளையும், தஞ்சையில் வேளாண்துறை சார்பில், தேசிய உணவு தொழில்நுட்ப முனைவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள், விவசாயிகள், தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேச முன்வந்தார். அவர், மைக் முன்னாடி நின்று கொண்டு பேச முற்படும்போது […]
சென்னை : தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உறந்தைராயன் குடிக்காடு பகுதியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினார் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சோதனை சென்னையிலும் தொடர்ந்து வருகிறது. கடந்த 2011 அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்சஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வைத்தியலிங்கத்தின் மூத்த மகன் V.பிரபு மீதும் […]
என்ஐஏ சோதனை : கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் தஞ்சையில் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். தஞ்சை திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் மதமாற்றத்தை எதிர்த்து செயல்பட்டதாகவும், அதன் பெயரில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை விசாரணையில் கூறப்பட்டது. மேலும், இந்த வழக்கில் 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அதில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் தற்போது வரையில் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். இந்த […]
Chithirai Festival: தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கோலாகலமாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டுக்கான சித்திரை பெருவிழா இன்று தஞ்சாவூர் பெரிய கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள […]
தஞ்சையில் விமானப்படை தளத்தில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு பயணிகள் விமான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று தனியார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. சிறுநகரங்களை இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சையில் இருந்து முதற்கட்டமாக 20 இருக்கைகளுடன் விமான சேவை தொடங்கப்படுகிறது. 1990-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தஞ்சை – சென்னை விமான சேவை பயணிகள் வருகையின்றி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் தஞ்சையில் விமான சேவை தொடங்கப்படுகிறது. ஓடுபாதை உட்பட அனைத்து அம்சங்களும் தயார் நிலையில் […]
இன்று தஞ்சை பெரிய கோவிலில் 1038வது சதய விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழன், தான் சோழ தேசத்து மன்னனாக முடிசூட்டிக்கொண்ட ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தில் இந்த சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதே போல ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் தான் ராஜ ராஜ சோழன் பிறந்தார் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கி.பி.985ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் முடிசூட்டிக்கொண்ட அருண்மொழி வர்மன் […]
புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மற்றும் திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு. புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். இதுபோன்று, மழை மற்றும் புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ராஜராஜ சோழன் முடிசூட்டி நாளை குறிப்பிடும் வகையில் தஞ்சை பெரிய கோவிலில் இன்றும் நாளையும் நடைபெறும் சதய விழா தொடங்கியுள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவில் என அளிக்கப்படும் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டிய சோழ மன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டி நாளை சதய விழாவாக ஆண்டுதோறும் பிரமாண்டமாக தஞ்சை பெரிய கோவிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1037வது சதய விழா இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்று ராஜராஜ சோழன் பற்றிய கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. அடுத்து நடன நிகழ்ச்சி, […]
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 27-ஆம் தேதி அதிகாலை சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற திருவிழாவின்போது, சப்பரம் மீது மின்சாரம் பாய்ந்ததால் 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து, நிவாரண உதவிகளும் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக […]
தஞ்சை தேர் விபத்து குறித்து இன்று விசாரணையை தொடங்குகிறார் வருவாய்த்துறை முதன்மை செயலாளர். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 27-ஆம் தேதி அதிகாலை சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது மின்சாரம் பாய்ந்த ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து, அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகளையும் அறிவித்தது. […]
தமிழகத்தில் இளம்பெண்கள் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.அந்த வகையில்,விருதுநகர்,வேலூர்,கடலூர் ஆகிய மாவட்டங்களில் அண்மையில் நடைபெற்ற கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில்,தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.பொதுவாக, அவர் பணி முடித்து விட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் தனது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.இந்த […]
தஞ்சை தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம். இதுதொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இம்மின் விபத்தில் இறந்த 11 குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் […]
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தஞ்சை தேர் விபத்து நிகழ்ந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு. தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது, திருவிழா காலங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூரில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. 11 […]
தஞ்சை தேர் விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தஞ்சாவூர் அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவில் பவனி வீதி உலாவின் போது இன்று அதிகாலை 3.10 மணி அளவில் தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் சாலையில் தேரோட்டம் முடிந்து, தேரினை திருப்ப முற்பட்டபோது தேர் கட்டுப்பாட்டினை இழந்து அருகில் இருந்த உயர் மின்னழுத்த மின் கம்பியில் உரசியதாக […]
தஞ்சை தேரோட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல். தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற 94-வது ஆண்டு சித்திரை தேர் திருவிழாவில் தேர் வரும்போது உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதால், அப்போது மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து,தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் […]
தஞ்சையில் பெரியகோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், தற்போது அரசு திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளதால், தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், தஞ்சையில் பெரியகோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெகு விமர்சையாக நடைபெறும், இந்த விழா கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் […]
தஞ்சையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 142-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 8-ம் தேதி முதல் தஞ்சையில் பள்ளிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஒரு மாணவிக்கு கொரோனா உறுதியானது. பின்னர், அந்த பள்ளியில் பயிலும் 58 மாணவிகள், ஒரு ஆசிரியர் மற்றும் 9 பெற்றோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. பின்னர், 13-ஆம் தேதி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு ஆசிரியருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, மேக்ஸ்வெல் […]
செகங்கமங்கலம் கிராமத்தில் இறந்தவரின் உடலுடன் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள். தஞ்சை மாவட்டம் செகங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக இடுகாட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, செல்லத்துரையின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பட்டுகோட்டையின் பேராவூரணி சாலையில் செல்லத்துரையின் சடலதைதை வைத்து அவரின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூரை சேர்ந்த கோழிக்கறி கடை உரிமையாளர் உதயா, தனது கடையை பூட்டி விட்டு திரும்புகையில் சில மர்ம நபர்கள் உதயாவை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் கோழி கறி கடை நடத்தி வந்தவர் உதயா. இவர் நேற்று இரவு வழக்கம் போல தனது கடையை மூடிவிட்டு பூட்டிவிட்டு சென்றுள்ளார். அவர் கடையை பூட்டி விட்டு திரும்புகையில் அப்பகுதியில் வந்த மர்ம நபர்கள் உதயாவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் உதயா […]