வாணியம்பாடி நகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், நேற்று வாணியம்பாடி காய்கறி சந்தையில் ஆய்வு செய்த நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் நடைபாதை வியாபாரிகள் விதிமீறல் மீறியதாக கூறி காய்கறி பழங்களை தரையில் தூக்கி வீசினார்.
unknown nodeஇதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிசில் தாமசின் இந்த செயலுக்கு பலர் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், சிசில் தாமஸ், வியாபாரிகளிடம் வருத்தம் தெரிவித்தார். கிழே தள்ளிவிட்ட பழங்களுக்கான இழப்பீட்டையும் வழங்கினார்.
இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து. வாணியம்பாடி நகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.