வாணியம்பாடி நகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், நேற்று வாணியம்பாடி காய்கறி சந்தையில் ஆய்வு செய்த நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் நடைபாதை வியாபாரிகள் விதிமீறல் மீறியதாக கூறி காய்கறி பழங்களை தரையில் தூக்கி வீசினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிசில் தாமசின் இந்த செயலுக்கு பலர் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், சிசில் தாமஸ், […]