அடேங்கப்பா..! ரூ.500 கோடி செலவில் அமைச்சர் ஸ்ரீராமுலு மகளின் திருமணம்.!

Default Image

பாஜகவை சேர்ந்த கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகளின்  திருமணத்தை ரூபாய் 500 கோடி செலவில் தொடர்ந்து 9 நாட்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளார். திருமணத்திற்காக ஒரு லட்சம் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தத் திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி ,, உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் கர்நாடக அரசியல் முன்னணி தலைவர்களும் அழைக்கப்பட உள்ளனர். பெங்களூர் பேலஸ் மைதானத்தில் 40 ஏக்கர் நிலம் திருமணத்திற்காக பயன்ப்பட உள்ளது. இதுதவிர 27 ஏக்கர் நிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளும்  ,15 ஏக்கர் நிலத்தில்  வாகனங்கள் நிறுத்தவும் பயன்பட உள்ளது.

அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகளின் ஒப்பனை செய்ய தீபிகா படுகோனின் மேக்கப்  மேனை அழைக்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் அம்பானி மகள் ஈஷாவின் திருமணத்தில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த ஜெயராமன் பிள்ளை  தான்   திருமண நிகழ்ச்சியில் படம்பிடிக்க பொறுப்பேற்றுள்ளார்.

மேலும் சினிமா நட்சத்திரங்களுக்கு ஆடைகள் வடிவமைக்க சந்தனா சந்தா தான் அமைச்சர் ஸ்ரீராமுலு மகளின்  ஆடைகள் வடிவமைக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக கட்சியில் இருந்து விலகி உள்ள  கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கடந்த 2016 -ம் ஆண்டு தனது மகள் பிரம்மனியின் திருமணத்தை  ரூ.550 கோடி செலவில் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமண ஏற்பாடுகள் கடந்த மாதம் பிப்ரவரி 27 -ம் தேதி தொடங்கிய வரும் மார்ச் 5 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்