2.7 லட்சம் மையங்களில் வாக்குப்பதிவு- சுனில் அரோரா அறிவிப்பு..!

Sunil Arora said polling would take place in 2.7 lakh polling stations in five states, including Tamil Nadu.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் 2.7 லட்சம் வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என சுனில் அரோரா தெரிவித்தார்.

டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா,  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து தேர்தல் நடைபெறக்கூடிய மாநிலங்களின் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்படும்.

தமிழகம் -234, புதுச்சேரி – 30, கேரளா – 140, மேற்கு வங்கம் – 294, அசாம் – 126 தொகுதிகளில் தேர்தல் என தெரிவித்தார். தமிழகத்தில் 88,936 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்படுகின்றது. கடந்த தேர்தலை ஒப்பிடும் பொழுது 34.73 சதவிகித வாக்கு பதிவு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளில் 18.68 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.

5 மாநிலங்களில் 2.7 லட்சம் வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்தார். வீடு வீடாக சென்று 5 பேர் மட்டுமே வாக்கு சேகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.