வைரல் போட்டாவும், இவாங்கா ட்ரம்பும்.! அசத்திய நம்ம ஊர் இளைஞர்கள்.!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய வருகையின்போது அவரின் மகள் இவாங்கா ட்ரம்ப் தன் கணவர் ஜாரெட்டுடன் வந்திருந்தார். அப்போது அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் முன்பு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய வருகையின்போது அவரின் மகள் இவாங்கா ட்ரம்ப் தன் கணவர் ஜாரெட்டுடன் வந்திருந்தார். அப்போது அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் முன்பு நின்று, இவாங்கா தன் கணவருடனும், தனியாகவும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் இவாங்கா, தாஜ்மகாலில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். இதையடுத்து நம்ம ஊரு இளைஞர்கள் இவாங்காவுடன் இருப்பது போன்று புகைப்படங்களை போட்டோஷாப் செய்து வெளியிட்டு வருகின்றனர். இந்த போட்டோஷாப் புகைப்படங்களை பார்த்த இவாங்கா உற்சாகமாகிவிட்டார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இவாங்கா, இந்தியர்களின் அன்பை வரவேற்று மகிழ்கிறேன் என்றும் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர் எனப் பதிவிட்டுள்ளார்.

unknown node

இந்நிலையில், பஞ்சாபி நடிகரும் பாடகருமான தில்ஜித், தனது ட்விட்டர் பக்கத்தில் இவாங்காவுடன் தாஜ்மகாலில் இருப்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார். அதில் என் வாழ்க்கையில் இவாங்கா வந்தவுடன் அவரைநான் தாஜ்மகாலுக்கு அழைத்துச் சென்றேன் எனக் குறிப்பிட்டிருந்தார். அவரது பதிவை பார்த்த இவாங்கா, என்னை தாஜ்மகாலுக்கு அழைத்துச் சென்றதுக்கு நன்றி எனவும் இது மறக்க முடியாத ஒரு தருணம் என்றும் பதிவிட்டுள்ளார்.