தாஜ்மஹாலைப் பார்வையிட அர்ஜென்டினாவில் வந்த ஒரு சுற்றுலாப் பயணிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தலை மறைவு சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், ஒவ்வொரு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், டிசம்பர் 26 அன்று தாஜ்மஹாலைப் பார்வையிட அர்ஜென்டினாவில் வந்த ஒரு சுற்றுலாப் பயணிக்கு கொரோனா சோதனை செய்ததில் தொற்று […]
தாஜ்மஹாலை பார்க்க செல்ல வேண்டும் என்றால் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்ற சான்று கட்டாயம். – ஆக்ரா மாவட்ட நிர்வாகம். உலகில் ஒரு சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் ஆரம்பித்துள்ள காரணத்தால் மத்திய அரசும் அதற்கான வழிகாட்டு அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. மேலும் மக்கள் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தியது. தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க செல்ல வேண்டும் என்றால் கொரோனா பரிசோதனை செய்து […]
காதல் சின்னம் தாஜ்மஹாலுக்கு சொத்துவரி கேட்டு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு சொத்துவரி செலுத்துமாறு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பலரும் வியந்து பார்க்கும் கலைநயம் கொண்ட தாஜ்மஹால் புராதன தன்மை கொண்டதால், அதனை மத்திய அரசின் தொல்லியல் துறை நிர்வகித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தாஜ்மஹால் நிர்வாக அதிகாரிகளுக்கு முதல் முறையாக சொத்துவரி கேட்டு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, முதல் முறையாக தாஜ்மஹாலுக்கு ரூ.1.9 கோடி தண்ணீர் வரியாகவும், […]
தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஃபதேபூர் சிக்ரி மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கு இன்று இலவச நுழைவு அனுமதிக்கப்படுகிறது. உலக பாரம்பரிய வாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அனைத்து தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் இலவச நுழைவைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 19 ஆம் தேதி தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஃபதேபூர் சிக்ரி மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட […]
தாஜ்மஹாலில் நீண்ட காலமாக பூட்டி இருக்கும் அறைகளை திறக்க முடியாது என கூறி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு. தாஜ்மஹாலில் நீண்ட காலமாக பூட்டி இருக்கும் 22 அறைகளை திறக்கக்கோரும் மனுக்களை தள்ளுபடி செய்தது அலகாபாத் நீதிமன்றம். தாஜ்மஹாலில் உள்ள 22 ரகசிய அறைகளில் இந்து கடவுள் சிலைகள் இருப்பதாகக் கூறி பாஜக நிர்வாகி பொதுநல வழக்கு தொடுத்திருந்த நிலையில், அறைகளை திறக்க முடியாது என கூறி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தியாவின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் முகலாய […]
இந்தியாவின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் முகலாய பேரரசர் ஷாஜகானால் கடந்த 1632-இல் கட்டப்பட்ட நிலையில்,உலக அதியங்களில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது. இந்நிலையில்,தாஜ்மஹால் கட்டடம் கட்டப்பட்ட நிலம் முதலில் ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்கு சொந்தமானது என்றும், அதன்பின்னர்,இந்த நிலம் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கையகப்படுத்தப்பட்டது என்றும்,ராஜஸ்தானின் பாரதிய ஜனதா (பாஜக) நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,இது தொடர்பாக முன்னாள் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த எம்பி குமாரி கூறுகையில்,”இந்த நிலம் ஜெய்ப்பூர் குடும்பத்துக்குச் […]
தாஜ்மஹாலை பார்வையிட்ட தல அஜித்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜித், சமீபத்தில் தாஜ்மஹாலை பார்வையிட்ட பொழுது அவருடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தல அஜித் சினிமாவில் முன்னணியில் இருந்து வருகிறார். இருந்த போதிலும், அவர் தற்போது துப்பாக்கி சுடுதலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித், அசத்தலான […]
உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹால், ராம் மஹால் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் தெரிவித்துள்ளார். ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் தாஜ்மஹால், முகலாயப் பேரரசர் ஷாஜஹான் அவர்களால் கட்டப்பட்டது. இது காதலின் சின்னம் என்று பலராலும் அழைக்கப்படுகிறது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டினார். இந்த தாஜ்மஹாலை காண பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த […]
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் வளாகத்தில், இந்துத்துவா குழுவின் நான்கு உறுப்பினர்கள் காவி கொடியசைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தாஜ்கஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் சந்திர திரிபாதி கூறுகையில், வலதுசாரி தலைவர் குவாரா தாகூர் தலைமையில் தாஜ்மஹால் வளாகத்தில் 3 பேர் காவி கொடிகளை அசைத்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் இந்து ஜாக்ரன் மன்ச் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். தாகூர் அவர்கள் இளைஞர் பிரிவின் மாவட்ட தலைவராக உள்ளார் என தெரிவித்துள்ளார். […]
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு அமலில் இருந்த நிலையில் தர்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஆறு மாதங்களுக்குப் பின், இன்று திறக்கப்படுகிறது. தாஜ்மஹால், கடந்த மார்ச், 17ம் தேதி மூடப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், புராதனச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களை திறக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனினும், தாஜ்மஹாலும், ஆக்ரா கோட்டையும் திறக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், ஆறு மாதங்களுக்குப் பின், […]
மூன்று மாத ஊரடங்கிற்கு பின் தாஜ்மஹால் திறப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த மூன்று மாத காலமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், வணிக வளாகங்கள், சுற்றுலா தளங்கள் என அனைத்துமே மூடப்பட்டிருந்த நிலையில், நாடு முழுவதும், அருங்காட்சியகங்கள் மற்றும் பழங்கால நினைவு சின்னங்கள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, அரசின் […]
ஆக்ராவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வீசிய புயலில் தாஜ்மஹாலில் சில பகுதிகளில் சேதமடைந்தது. உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டத்தில் யமுனை நதிக்கரையோரம் உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ் மஹால் அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் தாஜ் மஹாலில் சில பகுதிகளில் சேதமடைந்தது. இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தொல்பொருள் துறை கண்காளிப்பாளர் பசந்த் குமார் ஸ்வர்ணாகர், அங்கு சேதமடைந்தது குறித்து ஆய்வு நடத்தினார். அதன்பின், மார்பிள் […]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய வருகையின்போது அவரின் மகள் இவாங்கா ட்ரம்ப் தன் கணவர் ஜாரெட்டுடன் வந்திருந்தார். அப்போது அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் முன்பு நின்று, இவாங்கா தன் கணவருடனும், தனியாகவும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் இவாங்கா, தாஜ்மகாலில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். இதையடுத்து நம்ம ஊரு இளைஞர்கள் இவாங்காவுடன் இருப்பது போன்று புகைப்படங்களை போட்டோஷாப் செய்து வெளியிட்டு வருகின்றனர். இந்த போட்டோஷாப் புகைப்படங்களை பார்த்த இவாங்கா உற்சாகமாகிவிட்டார். இதுகுறித்து […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மனைவி மெலனியாவுடன் தாஜ்மஹாலை பார்வையிட்டு வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் .அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த ட்ரம்பை பிரதமர் மோடி வரவேற்றார்.விமான நிலையத்தில் டிரம்ப்பிற்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையெடுத்து ட்ரம்ப் சபர்மதி ஆசிரமத்திற்கு பார்வையிட்டார். பின்னர் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைப்பெற்ற “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார். பின்னர் டிரம்ப் […]
நடிகை காஜல் அகர்வால் தமிழ் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், அவர் தாஜ்மஹாலின் முன்பு எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த […]
இந்தியாவில் பெரிதும் பேசப்படும் விரும்பப்படும் தாஜ்மஹால் உலக 7அதிசயங்களில் ஒன்று இங்கு தினமும் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 7 உலக அதிசயங்களில் ஒன்றான டெல்லி ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்ப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தியா வருகிறார்கள்.இந்த அதியசம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்குவருகிறது. ஆக்ராவில் தாஜ்மகாலை வெள்ளிக்கிழமை மட்டும் சுற்றி பார்க்க இயலாது. ஏனென்றால் அன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை தோறும் ஆக்ராவில் உள்ள உள்ளூர் […]
உலக அதிசியங்களில் ஒன்றாகவும், உலக காதலர்களின் சின்னமாகவும் விளங்கும் தாஜ்மஹாலை காண தினந்தோறும் உலகெங்கிலிருந்தும் பல லட்சகணக்கில் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். அதனால் அங்கு கட்டுபடுத்தமுடியாத அளவுக்கு கூட்டம் இருக்கிறது மேலும் இங்கு சுற்று சூழல் மாசுபாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு இன்று (ஜனவரி 20) முதல் ஒரு நாளைக்கு நாற்பதாயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த முடிவு தொல்லியல் துறை பரிந்துரையின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது. source : […]