யுஜிசி நெட்  இரண்டாம் ஆம் கட்டத் தேர்வு செப்டம்பர் 20 மற்றும் 30 க்கு இடையில் ஒத்திவைப்பு..

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) – தேசிய தகுதித் தேர்வின் (நெட்) இரண்டாம் கட்டம் ஒத்திவைக்கப்பட்டு, செப்டம்பர் 20 முதல் 30 வரை நடத்தப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசிய தேர்வு முகமை (NTA), யுஜிசி நெட்  முதல் கட்டம் டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 (இணைக்கப்பட்ட சுழற்சிகள்) தேர்வினை ஜூலை 9, 11 மற்றும் 12, 2022 ஆகிய தேதிகளில் 33 பாடங்களுக்கு நாடு முழுவதும் 225 நகரங்களில் உள்ள 310 தேர்வு மையங்களில் நடத்தியது.

முன்னதாக யுஜிசி நெட் இரண்டாம் கட்டம் தேர்வை ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது. இப்போது அவை ஒத்திவைக்கப்பட்டு இறுதிக் கட்டத் தேர்வு 20 மற்றும் 30 செப்டம்பர் 2022 இடையே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்