பெங்களூரு :2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில், நேற்றைய தினம் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், இன்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA), ஆர்சிபி அணிக்காக மைதானத்திற்குள் ஒரு சிறப்பு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
இறுதியில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் பெரும் துயரமாக மாறிவிட்டது. இதனை காண ஆர்சிபி ரசிகர்கள் எம். சின்னசாமி மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதியில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தநெரிசலில்சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. இதில்,4 பெண்கள் மற்றும் ஒரு சிறு குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்ததுடன், காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வளவுக்கு நடுவிலும் மைத்தனத்திற்குள் ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடந்து வருகிறது.
unknown node