கர்நாடகா : 2025-26 ஆம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டிற்காக மொத்தம் ரூ. 4.095 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில். கர்நாடக முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை தனது 16வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும், கர்நாடக பட்ஜெட்டில், காங்கிரஸ் அரசு வாக்குறுதி அளித்த ஐந்து உத்தரவாதத் திட்டங்களுக்கு ரூ.51,034 கோடி ஒதுக்கப்பட்டும் இருக்கிறது. பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக கோயில் பூசாரிகளின் ஆண்டு சம்பளம் உயர்த்தப்பட்டது முதல் கர்நாடகா முழுவதும் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டது […]
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான ரான்யா, துபாயிலிருந்து நேற்று புறப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் அவரைகைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நடிகை ரான்யா ராவ், கிச்சா சுதீப்புடன் மாணிக்யா உள்ளிட்ட கன்னடப் படங்களிலும், ‘பதாகி’ மற்றும் ‘வாகா’ போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். தகவலின்படி, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நடிகை […]
சென்னை : ஊழல் தடுப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டு பெங்களூரு நீதிமன்ற கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, ஜெயலலிதாவின் சொத்துக்கள் நேற்று தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) வசம் ஒப்படைக்கப்பட்டன. அதில், 27 கிலோ தங்கம், 1,116 கிலோ வெள்ளி, வைர நகைகள், 10,000 புடவைகள், 750 செருப்பு ஜோடிகள், 1,526 ஏக்கர் நிலப் பத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் […]
டெல்லி : திருமணம், கலாச்சாரம், பண்பாடு என தொன்மை வாய்ந்த இந்திய சமூகம் தற்போது வேகமாக நகர்ந்து வரும் நவீன உலகில் சமூக மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இது எம்மாதிரியான மாற்றம் என்பது அவரவரின் மன சுதந்திரத்தை பொறுத்து புரிந்துகொள்ளும் எண்ணமும் மாறுபடுகிறது. இந்த நவீன மாற்றத்திற்கு உதாரணமாக தற்போது வெளியான ஒரு செயலியின் ஆய்வு அறிக்கை பார்ப்போருக்கு கொஞ்சம் ஷாக் கொடுத்துள்ளது. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ( Happily ever after ) எனும் […]
டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க தொடங்கிவிட்டன. முதலில் மற்ற நாடுகளில் இந்த தொற்று காணப்படவில்லை என்று கூறினாலும், இந்தியாவில் 3 HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில் மத்திய அரசு அறிவுறுத்தியிருத்த அதே வழிகாட்டுதல் நெறிமுறைகள் தற்போதும் மாநில அரசுகளால் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கர்நாடகாவில் 2 HMPV வைரஸ் தொற்றுகளும், குஜராத்தில் […]
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும் மறக்க இயலாது. இந்த வைரஸ் முதலில் சீனாவில் இருந்து தான் பரவியது. அதே போல தற்போது Influ A, HMPV வைரஸ்கள் அங்கு பரவுகின்றன. இதனை வெளி உலகத்திற்கு சீனா மறைக்கிறது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பதை […]
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உறுதி செய்துள்ளது. சீனாவில் அதிகளவில் பரவி வரும் இந்த வைரஸ், பெங்களூருவில் 8 மாத ஆண் குழந்தைக்கும், 3 மாத பெண் குழந்தைக்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினர் சமீபத்தில் எங்கும் வெளிநாடு பயணம் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் இந்த வைரஸ் அவர்களுக்கு […]
பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி பலியாகிய சம்பவம் அப்பகுதினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தும்கூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக 3 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து நடந்த உடனே, காரில் சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவ அப்பகுதி மக்களும், பயணிகளும் விரைந்து வந்தனர். SUV யில் இருந்து […]
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில் Centaurus Lifestyle Brands Private Ltd எனும் டெக்ஸ்டைல்ஸ் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு முறையாக PF பணம் செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. அதாவது, ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் முறையாக PF பணத்தை EPFOவிடம் வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். ஆனால், […]
பெங்களூர் : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் இதுவரை பந்துவீச்சில் எதிரணியை மிரள வைத்து வந்த முகமது ஷமி பேட்டிங்கிலும் அதிர வைத்துள்ளார். சண்டிகர் அணிக்கு எதிரான போட்டி டிசம்பர் 9 பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், பெங்கால் அணியின் இன்னிங்கிஸின் போது முகமது ஷமி 17 […]
பெங்களூரு : நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகளைச் சுமந்துகொண்டு அந்த கனவு எப்போது நிறைவேறும் என்று யோசித்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அந்த கனவுகளைச் சீக்கிரமாக அடைவதற்காக வித்தியாசமான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். அப்படி தான் பெங்களூரில் உள்ள இளைஞன் ஒருவர் தன்னுடைய கனவை அடைய அனைவரையும் கவரும் வகையில், வித்தியாசமான முயற்சி ஒன்றை எடுத்திருக்கிறார். பெங்களூரைச் சேர்ந்த சாமுவேல் கிறிஸ்டி என்ற இளைஞர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு இப்போது ஆட்டோ ஒட்டிக்கொண்டு இருக்கிறார். […]
பெங்களூரு : ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் நிலை தடுமாறி ஓடிய பேருந்தை தனது சாமர்த்தியமான செயலால் நடத்துநர் நிறுத்தி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும், தனது துரீத செயலால் பேருந்தை நிறுத்தி பயணம் செய்த பயணிகளின் உயிரைக் காப்பற்றிய நடத்துநருக்கு பலரும் நன்றியும், பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை (நவ-4) அன்று பெங்களுருவில் யஷ்வந்த்பூர் என்னும் அருகே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது தொடர்பாக […]
பெங்களூர் : தீபாவளி இரவில் நடந்த துயர சம்பவத்தில் 32 வயது சபரீஷ் என்ற நபர் உயிரிழந்தார். இவருடைய இறப்புக்குக் காரணம் அவர்கள் நண்பர்கள் கொடுத்த தேவையில்லாத சவால் தான் காரணம். ஏனென்றால், தீபாவளி பண்டிகை அன்று சபரீஷ் தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டாடி வந்தார். அப்போது அவருடைய நண்பர்கள் ஆபத்தான முறையில் ஒரு சவாலைச் செய்யச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். மதுபோதையில் அவருடைய நண்பர்கள் பெரிய ரக பட்டாசு ஒன்றைக் கீழே வைத்துக்கொண்டு அதன்மீது கார்ட் போர்ட் […]
பெங்களூரு : கனமழை எதிரொலியாக பாபுசபால்யாவில் கட்டுமானத்தில் இருந்த 6 அடுக்குகள் கொண்ட புதிய கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஏழுமலை என்பது தெரியவந்தது. இடிபாடுகளில் மேலும் ஒருவர் சிக்கி இருக்கலாம் என்பதால், தொடர்ந்து 4வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர், அவரது மகன் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இந்த […]
பெங்களூரு : கர்நாடகாவில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக பெங்களுருவில் உள்ள பாபுசாப் பாளையாவில் கட்டப்பட்டு வந்த 6 அடுக்குகள் கொண்ட புதிய கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கிய 20பேர் காயத்துடன் மீட்கப்பட்டாலும், இருப்பினும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தமிழகத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சத்யராஜ் என இருவர் பரிதாபமாக உயிரிழிந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த விபத்து காரணமாக கட்டிட […]
மேற்கு வங்கம் : வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயல் நாளை தீவிரமடைந்து வலுவான புயலாக மாறும் என முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளாக இன்று மேற்கு வங்கம், பெங்களுரு மற்றும் ஒடிசா மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தனர். மேலும், ரயில் சேவைகளும் தடைபட்ட நிலையில், புயலால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க இந்திய கடற் படை தயாரான நிலையிலும் இருந்து வருகிறது. மேற்கொண்டு, பாதிப்புகள் ஏற்படும் ஒரு சில பகுதிகளுக்கு பொது […]
ஒடிசா : மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவான டானா புயல், நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பின்னர், அது வடக்கு ஒடிசா மற்றும் மேற்குவங்க கடற்கரை பகுதிகளில், பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மூன்று […]
பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. கார்கள், பைக்குகள், பேருந்துகள் சாலைகளில் மிதக்கின்றன. இதனால் பெங்களூருவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிழக்கு பெங்களூரு பாபுசபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 6 மாடிக் கட்டடம், கனமழையால் இடிந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 17 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. […]
பெங்களூர் : இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே சமயம், நேற்றிலிருந்தே பெங்களூருவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சின்ன சாமி மைதானத்தில் நீரும் தேங்கியது. இருப்பினும், போட்டி அடுத்த நாள் 9.30 மணிக்குத் தான் தொடங்கும் என்பதால் மழை நின்று போட்டி தொடங்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்த்த […]
பெங்களூரு : நியூஸிலாந்து அணி, இந்தியாவில் 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றியப்பயணத் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி, இன்று (16-10-2024) பெங்களூரூவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியானது நடைபெற இருந்தது. இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கவுள்ள இந்த போட்டியானது தற்போது மழை பெய்து வருவதால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைப்பொழிவு காரணமாக டாஸ் கூட போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை மழை நின்றால் அடுத்த 45 நேரம் முதல் […]