ஒடிசாவில் ஆட்டோ ரிக்ஷாவில் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு, 9 பேர் காயமடைந்தனர்.
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் நேற்று லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். கொரோனா தொற்றுநோயால் ஒடிசா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், பழங்குடியினர் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் அரிசி இலவசமாக விநியோகிக்க மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், அதற்ககாக தோகோட்டா கிராமத்திலிருந்து சுலியாபாவுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. தற்போது காவல் துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சேர்ந்து காயமடைந்தவர்களை பங்கிரிபோசி சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், லாரி டிரைவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினர் தெரிவித்தனர்.