காஷ்மீரில் மூன்று லஷ்கர் – இ- தொய்பா பயங்கரவாதிகள் கைது ....!

Three Lashkar-e-Taiba militants have been arrested in Kashmir.

காஷ்மீரில் லஷ்கர் – இ- தொய்பா அமைப்பை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோப்ரா நகரில் உள்ள டொர்புரா  பகுதியில் சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர்.

அதில் அவர்கள் 3 பேரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது.  இதனையடுத்து அர்ஃபத் முஜீத் தர், துஷீப் அகமது தர், மோமின் நசீர் கான் ஆகிய மூன்று பயங்கரவாதிகளையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், கையெறி குண்டு மற்றும் தோட்டக்கள் உள்ளிட்ட சில பயங்கரவாத ஆயுதங்களையும் கைப்பற்றி உள்ளனர்.