Azam Cheema : பாக்கிஸ்தானின் பைசலாபாத்தில் மாரடைப்பு காரணமாக லஷ்கர்-இ-தைபாவின் (லெட்) உளவுத்துறைத் தலைவரான அசாம் சீமா (70 வயதில்) உயிரிழந்தான். கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த தொடர் தாக்குதல் சம்பவம் மற்றும் 2006ல் ஜூலையில் நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு சம்பவம் போன்ற பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் முக்கிய குற்றவாளியாக இருந்த லஷ்கர்-இ-தைபாவின் (லெட்) உளவுத்துறைத் தலைவர் அசாம் சீமா, மாரடைப்பு காரணமாக பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உயிரிழந்தான். Read More […]
கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதியின் உடலை பாகிஸ்தான் ராணுவம் ஏற்றுக்கொண்டது. திங்களன்று(செப் 5), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லியின் சப்ஸ்கோட் கிராமத்தைச் சேர்ந்த தபாரக் ஹுசைன் (32) என்பவரின் உடல், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஓசி) பாகிஸ்தானை கடக்கும் இடத்தில் இந்திய ராணுவத்தால் பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதியான ஹுசைன் இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜோரி ராணுவ மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்தார். ஆகஸ்ட் 21ஆம் தேதி ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா […]
காஷ்மீரில் லஷ்கர் – இ- தொய்பா அமைப்பை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோப்ரா நகரில் உள்ள டொர்புரா பகுதியில் சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அதில் அவர்கள் 3 பேரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது. […]
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியமான பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அஷ்முகாம் பகுதியில் ராணுவத்துடன் இணைந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவனை போலீசார் கண்டுள்ளனர். இவன் லக்ஷர் ஈ தொய்பா பயங்கரவாதி என அடையாளம் காணப்பட்டது. இதனை அடுத்து அந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் அப்துல்லா மாலிக் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட […]