சென்னை: மேற்கு வங்க மாநிலத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி உபா (UAPA ACT) சட்டத்தின் கீழ் தேடப்பட்டு வந்த அனோவர் எனும் தீவிரவாதியை இன்று சென்னை கோயம்பேட்டில் மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர். அனோவர், ‘அன்சார் அல் இஸ்லாம்’ என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்றும், இந்த இயக்கம் சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவுக்கு ஆதரவாக செயல்படும் தீவிரவாத அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அனோவர், இந்திய நாட்டிற்கு எதிராக செயல்பட்டதாக கூறி உபா சட்டத்தில் […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் இன்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்த ஓய்வுபெற்ற மூத்த காவல் கண்காணிப்பாளர் அதிகாரி அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் கூற்றுப்படி, பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர் முகமது ஷாபி மிர் (72) , இவர் ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் முன்னாள் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர். அவர் கண்ட்முல்லா கிராமத்தில் மசூதி ஒன்றில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் அவர் மீது […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என காஷ்மீர் பாதுகாப்பு படையினர் இன்று தெரிவித்துள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக காஷ்மீர் போலீசார், இந்திய ராணுவம் ஈடுபட்ட கூட்டு நடவடிக்கையில் 34 ராஷ்டிரிய ரைஃபிள் பிரிவு வீரர்கள், 9 உயர் சிறப்புப் படை பிரிவினர், காஷ்மீர் போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது குல்காம் மாவட்டத்தின் டிஹெச் போரா பகுதியின் சாம்னோ பாக்கெட்டில் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் இந்த என்கவுன்டர் […]
ஜம்மு காஷ்மீர்: புல்வாமாவின் தும்சி நவ்போரா பகுதியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்தக் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து புல்வாமா மற்றும் ஜம்மு காஷ்மீரின் பிற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், தொழிலாளி ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட இச்சம்பவம் […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இந்த என்கவுன்டரில் மேலும் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாக காஷ்மீர் ஏடிஜிபி தெரிவித்துள்ளார். இதன் மூலம் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டு, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் கிடைத்தவுடன் தெரிவிக்கப்படும் என்று காஷ்மீர் […]
ஜம்முவில் லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இந்திய பாதுகாப்பு படை. ஜம்மு காஷ்மீர் சித்ரா பகுதியில் லாரியில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் சித்ரா பகுதியில்சோதனையின்போது லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை சுட்டுள்ளனர். இதன்பின் பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலில் லாரியில் இருந்த 4 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், லாரியில் இருந்து 7 ஏகே47 ரக துப்பாக்கிகள், 3 துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பழத்தோட்டத்திற்குச் சென்ற காஷ்மீரி பண்டிட் ஒருவர், தீவிரவாதிகளால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் சவுத்ரி குண்ட் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகில் பூரன் கிரிஷன் தாக்கப்பட்டுள்ளார், ஷோபியான் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு கிரிஷன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது மற்றும் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் ஆப்கானிஸ்தானில் கொலையாளி ஒருவரிடம் உதவி கோரியுள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு துறையின் கைபர் பக்துன்க்வா பிரிவை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாதுகாப்புக்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பாகிஸ்தானில் பொருளாதார […]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் குருத்வாராவில் ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலி. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கர்தே பர்வான் குருத்வாராவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. குருத்வாரா வாயிலுக்கு வெளியே குண்டு வெடித்ததில் குறைந்தது இரண்டு ஆப்கானியர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குருத்வாராவின் பாதுகாப்பு காவலாளியான அகமதுவை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காபூலில் உள்ள குருத்வாரா மீது தாக்குதல் […]
காஷ்மீரில் வெளிமாநில மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் ஆலோசனை. ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் நோவலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது உயர்மட்ட அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ […]
குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் இன்று பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் இன்று பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். எலாகி டெஹாட்டி (Ellaqui Dehati Bank) வங்கியின் ஊழியர் விஜய் குமார் வங்கி வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கவாதிகள் தாக்குதலை தொடர்ந்து உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வங்கி ஊழியர் விஜய் குமார் வழியிலேயே உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. […]
ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு வன்முறைகளும்,தீவிரவாத நடவடிக்கைகளும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.இந்த நிலையில்,காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை ஸ்ரீநகர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்,அவர்களிடமிருந்து 15 கைத்துப்பாக்கிகள்,30 மெகசின்கள்,300 தோட்டாக்கள் மற்றும் 1 சைலன்சர் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை போலீசார் மீட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. J&K | Two local hybrid terrorists of proscribed terror outfit LeT/TRF by Srinagar Police. […]
ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடத்த மோதலில் 3 பேர் பயங்கரவாதிகள் சுட்டுகொலை. ஜம்மு காஷ்மீர் மாநிலம், அமர்நாத் யாத்திரையின் முக்கிய பாதையான அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் பாதுகாப்புப் படையினருடன் நடத்த மோதலில் 3 பேர் பயங்கரவாதிகள் சுட்டுகொலைப்பட்டனர். இந்த வழித்தடத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்துவதில் இன்றைய என்கவுன்டர் ஒரு பெரிய வெற்றி என்று அம்மாநில காவல்துறை கூறியுள்ளது. இன்று சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில், ஒருவர் நீண்ட நேரமாக உயிர் பிழைத்த […]
காஷ்மீரில் லஷ்கர் – இ- தொய்பா அமைப்பை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோப்ரா நகரில் உள்ள டொர்புரா பகுதியில் சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அதில் அவர்கள் 3 பேரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது. […]
மியான்மர் எல்லையில் அசாம் ரைபிள் படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் 5 இந்திய ராணுவ வீரர்களின் உயிர் இழப்பிற்கு பதில் தாக்குதலாக அருணாசலப் பிரதேசத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் கோக்லாவில் இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகே அசாம் ரைபிள்ஸ் வீரர்களுடன் என்கவுன்டர் நடைபெற்றது. இந்த தாக்குதலில் நாகலாந்தின் தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் அசாம் ரைபிள்ஸ் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டிலுள்ள அனைத்து பயங்கரவாதிகளுக்கும் தாய் முதல்வர் மம்தா பானர்ஜி தான் என பாஜக எம்பி சௌமித்ரா கான் கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தில் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை 15 கிலோ மீட்டரில் இருந்து 50 கிலோ மீட்டராக விரிவுபடுத்த கூடிய மத்திய அரசின் நடவடிக்கையில் தலையிட்டு வாபஸ் பெற வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இந்த கடிதம் தொடர்பாக பாஜக எம்.பி […]
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 25 பேர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் லக்ஷர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டி பயங்கரவாத சதித்திட்டம் நடத்துவதாக கடந்த மாதம் பத்தாம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த தீவிரவாதிகளுக்கு உதவியதன் அடிப்படையில் கஷ்மீரில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் இருபத்தி மூன்று பேரை […]
பாகிஸ்தான் உலகளாகிய பயங்கரவாதிகளை தியாகிகளாக புகழ்கிறது என ஐநா சபையில் இந்தியா கூறியுள்ளது. அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபை 76 ஆவது கூட்டத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் ஆலோசகர் அமர்நாத் அவர்கள் பாகிஸ்தான் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர் பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி இங்கு அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுகிறார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் ஓசாமா பின்லேடன் போன்ற உலகளாவிய பயங்கரவாதிகளை தியாகிகளாக கூறுகிறார். மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் […]
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறுகையில், நாங்கள் பாகிஸ்தானுடன் நேர்மையாக இருக்கிறோம். மேலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் தற்பொழுது பயங்கரவாதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது. அதனால் எங்களின் கவலைகளை பாகிஸ்தான் தலைவர்களுடன் வெளிப்படையாக பேசி தீர்க்க விரும்புகிறோம். மேலும் எல்லையில் […]
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய எண்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு -காஷ்மீர் மாநிலம் பந்திபோராவின் வாட்னிரா எனும் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்பொழுது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்பொழுது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் […]